தமிழக சட்டமன்ற தேர்தல் – இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்!!

0

தற்போது நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம், புதுவை மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை துவங்கி மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்த முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். இவர்களை போல் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்ட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது அதிமுக கட்சி இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விநியோகிக்க உள்ளது. மேலும் இந்த விருப்ப மனு விநியோகம் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த மனுவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் வைத்து விநியோகிக்க உள்ளனர்.

குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 409 இடங்களில் பாஜக அபார வெற்றி!!

இதனை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் துவங்கி வைக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் போட்டி இடுவதற்கான விருப்ப மனுகளுக்கு ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் போட்டி இடுவதற்கு ரூ.5,000 மற்றும் கேரளாவில் போட்டி இடுவதற்கு ரூ.2,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here