நாளை தைப்பூசத்திற்கு முருகன் கோயில் போறீங்களா? இந்த கண்டிஷன் உங்களுக்குத்தான்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

0
நாளை தைப்பூசத்திற்கு முருகன் கோயில் போறீங்களா? இந்த கண்டிஷன் உங்களுக்குத்தான்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 5) தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும், முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வலது புறமாக நடந்து செல்ல வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இதனால் இடது புறமாக எதிரில் வரும் வாகனங்களை கவனித்து விபத்துகளை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

NPSC குரூப்-4 தேர்வு முடிவு எப்போ? Cut off குறித்த பல லேட்டஸ்ட் தகவல்கள் உள்ளே!!

இது மட்டுமில்லாமல், ஜாதியை வெளிப்படுத்தும் உடைகளை அணிய கூடாது. பாம்பு உள்ளிட்ட சர்பக்காவடி எடுத்து வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார். பக்தர்கள் காவல் துறைக்கு, முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here