மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல் ,டீசல் விலை… சற்றே ஆறுதலில் வாகன ஓட்டிகள்!!!

0

நாளுக்கு நாள் நிலையற்று இருக்கிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உயரும், குறையும் என்ற நிலையிலையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளன. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலையே நீடிக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்க படுகின்றது. கச்சா எண்ணெய் விலைகளின் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அமைகிறது.  கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உச்சத்தை எட்டும் நிலையை அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

அதன்படி, நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அதற்கு முந்தைய நாள் அதாவது ஜூன் 15-ம் தேதி விற்கப்பட்ட விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 22 காசுகள் மற்றும் 12 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.91 எனவும் ,ஒரு லிட்டர் டீசல் ரூ.92.04   விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் இதே விலையிலையே இன்றும் நீடிக்கிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here