இன்று பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… தனி விமானத்தில் டெல்லி பயணம்!!!

0

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு,  முதன் முறையாக இன்று  பிரதமர்  மோடியை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். முதல்வராக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர் களை சந்திப்பது வழக்கம். ஆனால் மாநிலத்தில் நிலவி வரும் நோய் தொற்று காரணமாக முதல்வர் டெல்லி செல்வது தாமதமாகியது. தற்போது நோய் தொற்று குறைந்து வரும் வேளையில் 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

 

இவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பில் நீட் தேர்வு, தமிழகத்திற்கு தடுப்பூசி விநியோகம், பரவி வரும் பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இன்று காலை 7.30 மணி அளவில் தமிழக முதல்வர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணி அளவில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்திற்கு சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here