பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவுடன், பாக்கியலட்சுமி எழில் காதலில் விழுந்தாரா?? வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் எழிலும், காவியாவும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எழில், காவியா

லாக்டவுன் காரணமாக அனைத்து ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இதனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வர நடிகர், நடிகைகள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்குமா?? என்ற பழமொழிக்கு இணங்க நடிகர்கள் இன்ஸ்டாவில் பல ரீல்ஸ்களை செய்து அசத்தினர்.

தற்போது மீண்டும் ஷூட்டிங் எல்லாம் ஆரம்பிக்க அந்த குஷியில் மீண்டும் பல போட்டோஸ், ரீல்ஸ் என கலக்கி வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், பாக்கியலட்சுமி சீரியலும் மீண்டும் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த குடும்பம் ஏற்கனவே ஒரு முறை இணைந்து இருந்ததால் மீண்டும் இவர்களின் காம்போ கலைக்கட்டியுள்ளது. இவர்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடிக்கும் விஷாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவியாவும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்த்த பலரும் இது காதலாக இருக்குமோ?? என்றும் சந்தேகித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here