தமிழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!!

0
தமிழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெட்ரோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கடும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்:

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வெடிக்கும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இமெயில் முகவரியுடன் மொபைல் எண்ணும் சேர்த்து இசக்கி என்பவர் பெயரில் வந்துள்ளதால் கடும் பதட்டம் நிலவி வருகிறது.

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து 3வது வெற்றி – இரு அணிகளும் வெளியேற்றம்!!

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்களும் கடும் பதட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here