தீபாவளியொட்டி களைகட்டும் தங்க நகைகள் விற்பனை – இன்றைய விலை பட்டியல் இதோ!!

0
தீபாவளியொட்டி களைகட்டும் தங்க நகைகள் விற்பனை – இன்றைய விலை பட்டியல் இதோ!!

தீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.44,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான தாய்மார்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தங்கத்தின் விலை ஓரளவுக்கு குறைந்தபடியே இருந்து வந்தது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6070க்கும், சவரனுக்கு ரூ.48,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5600க்கும், சவரனுக்கு ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லாமல் கிராமுக்கு ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் பொருட்டு புது தங்க நகைகளுடன் தாய்மார்கள் எக்கசக்க மகிழ்ச்சியுடன் வாங்கி மகிழ்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here