பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து 3வது வெற்றி – இரு அணிகளும் வெளியேற்றம்!!
நேற்று நடைபெற்ற லீக் தொடரில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 44வது லீக் தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியினர் மோதி கொண்டனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பில் 337 ரன்களை குவித்தனர். இதில் இங்கிலாந்து அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகிய மூவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
UGTRB தேர்வர்களே…, இத முதல தெரிஞ்சுக்கோங்க…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதனால், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 338 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை மட்டுமே பெற்றனர். இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி 5வது தோல்வியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.