ராஜிவ் காந்தி கொலை வழக்கு – 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!!

0

நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுத்துள்ளார். அதன்படி அவர்களின் விடுதலை பரிந்துரையை கவர்னர் தற்போது நிராகரித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். தற்போது இவர்களை விடுதலை செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில கவர்னருக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதுகுறித்து கடந்த 2017ம் ஆண்டில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஓர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நான் வாங்கிக்கொடுத்ததாக சொல்லப்பட்ட வெடி குண்டு பேட்டரியை, நான் தான் வாங்கி கொடுத்தேன் என்று சாட்சிகள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த வழக்கில் எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கவர்னர் நிராகரிப்பு:

மேலும் தமிழக அமைச்சரவையும் இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐக்கு கடும் கண்டனத்தை விதித்தது. மேலும் இதுகுறித்து தமிழக ஆளுநர் ஏன் தாமதமாக்குகிறார் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில் இவர்களது விடுதலை குறித்து ஆளுநர் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். முடிவில் ஆளுநருக்கு நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்தது.

ரம்யா பாண்டியனுக்கும் சோமுக்கும் திருமணமா?? வைரலாகும் புகைப்படம்!!

தமிழக ஆளுநர் தரப்பு வக்கீல் துஷார் மேத்தா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஓர் பிரமான பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து நான் எப்படி முடிவெடுக்க முடியும். இது ஒரு நாட்டின் பிரதமர் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் எப்படி ஆளுநர் முடிவெடுக்க முடியும். இதற்கு முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது. அதனால் தமிழக அமைச்சரவை தீர்மானம் மற்றும் பேரறிவாளன் கருணை மனு ஆகியவற்றை தனது மூலமாக நிராகரிக்கப்படுகிறது என்று அந்த மனுக்களை நிராகரித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here