காரசாரமான “பெப்பர் சிக்கன் வறுவல்” செய்வது எப்படி.,மணமணக்கும் ஸ்பெஷல் ரெசிபி!!

0
காரசாரமான
காரசாரமான "பெப்பர் சிக்கன் வறுவல்" செய்வது எப்படி.,மணமணக்கும் ஸ்பெஷல் ரெசிபி!!

அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் சிக்கனை, சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி, கிரில் சிக்கன் என்று விதமாக விதமாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும் இப்போது மழை காலம் என்பதால் மருத்துவ குணம் வாய்ந்த மிளகு, சீரகம் சேர்த்து “பெப்பர் சிக்கன் வறுவல்” செஞ்சு சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் மிளகு சளி தொந்தரவில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பதிவில் “பெப்பர் சிக்கன் வறுவல்” செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பட்டை ,கிராம்பு – 2
  • சோம்பு – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகு தூள் – 4 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் நன்றாக சுத்தம் செய்த சிக்கனை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதையடுத்து ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை,கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் தனியா தூள், சீரக தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது எண்ணெய் பிரிந்து வரும். இந்த சமயத்தில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது தண்ணீர் வற்றி சிக்கன் வெந்து விடும், கொத்தமல்லி தூவி இறக்கினால், “காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல்” ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here