
சொத்து வரியை தற்போது வரை செலுத்தாமல் இருக்கும் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்து வரி :
தமிழக அரசாங்கம் பொது மக்களிடம் வசூலிக்கப்படும் வரிகளில் ஒன்றாக இருந்து வருவது சொத்து வரி. இந்த வரியை அரசாங்கம் இரண்டு அரையாண்டு பகுதிகளாக பிரித்து வசூலித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஆண்டு முதல் பகுதி சொத்து வரியை உரிமையாளர்கள் கட்டிய நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வரியை உரிமையாளர்கள் கட்டுவதற்கு கடந்த மாதம் (1.10.2022) முதல் செலுத்த ஆரம்பித்துவிட்டன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தற்போது வரை சொத்து வரியை கட்டாமல் இருக்கும் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது சொத்து வரி சீராய்வின் படி உயர்த்தப்பட்டிருக்கும் வரியை கட்ட தவறிய உரிமையாளருக்கு ஏற்கனவே இந்த மாத நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளைய மின்தடை பகுதிகள் (23.11.2022) – அதிரடியாக வெளியான முழு விவரங்கள்!!
தற்போது இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்போது வரைக்கும் வரி செலுத்தாதவர்கள் எந்தவித வட்டி இல்லாமல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் இரண்டு சதவீத தனி வட்டியை தவிர்த்து வரியை செலுத்துமாறு கூறியுள்ளது.