கடலில் மூழ்கிய சஞ்சு சாம்சன்…, தத்தளிக்கும் உம்ரன் மாலிக்…, ரிஷப் பந்தை மட்டும் காப்பாற்றும் பிசிசிஐ!!

0
கடலில் மூழ்கிய சஞ்சு சாம்சன்..., தத்தளிக்கும் உம்ரன் மாலிக்..., ரிஷப் பந்தை மட்டும் காப்பாற்றும் பிசிசிஐ!!
கடலில் மூழ்கிய சஞ்சு சாம்சன்..., தத்தளிக்கும் உம்ரன் மாலிக்..., ரிஷப் பந்தை மட்டும் காப்பாற்றும் பிசிசிஐ!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் இல்லாததை அடுத்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பினை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றன.

சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக்:

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 வது டி20 போட்டியை மெக்லீன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. இவர்கள் இருவருக்கும் கடந்த டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்காததால், ரசிகர்கள் மத்தியில் இருந்து, பல்வேறு கேள்விகள் பிசிசிஐ நோக்கி எழுந்து வந்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், குறிப்பாக, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக, டி20 உலக கோப்பையில் இடம் கொடுக்காமல் இருந்ததற்க்கே, ரசிகர்கள் போராட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால், இதனை சமாளிக்கும் விதமாக பிசிசிஐ உள்ளூர் போட்டிக்கு இவரை கேப்டனாக நியமித்திருந்தது. இதன்படி, அந்த பொறுப்பையும் சிறப்பாகவே சஞ்சு சாம்சன் செய்து இருந்தார்.

அவன் நம்ம பையன் பா…, ஜடேஜாவை குறித்து பிரதமர் மோடி…, வெளியான தகவல்!!

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா எதிர்கொள்ளும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் இடம் பெற்றிருந்தார். இது தவிர, ஒரு போட்டியிலும் இவரை விளையாடும் லெவனில் சேர்க்கவில்லை. இன்றைய போட்டியில் இவரை எதிர்பார்த்த ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றத்தை அடைந்தனர். இதனால், ரிஷப் பந்தை பிசிசிஐ தூக்கி விடுவது போன்றும், உம்ரன் மாலிக்கை தண்ணீரில் தத்தளிப்பது போன்றும், சஞ்சு சாம்சன், ஆழ்கடலில் மூழ்கி கிடைப்பது போன்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here