முல்லையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகும் கதிர்? எல்லாத்துக்கும் காரணம் இதான்!!

0
முல்லையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகும் கதிர்? எல்லாத்துக்கும் காரணம் இதான்!!
முல்லையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகும் கதிர்? எல்லாத்துக்கும் காரணம் இதான்!!

சின்னத்திரை திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் இப்போது சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதிர் VS ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் என்னதான் மூர்த்தி குடும்பம் கஷ்டப்பட்டாலும் இறுதியில் சொந்தமாக வீடு கட்டி அண்ணன், தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று தான் தெரிகிறது. ஆனால் இவர்களை பிரிக்க நினைக்கும் ஜனார்த்தனன் ஒரு பக்கம் பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இப்படி சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய பிரபலங்கள் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவரை பார்ப்பதற்காகவே சிலர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தினம் தோறும் தவறாமல் கண்டு களித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இப்போது குமரனுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த சீரியலில் இருந்து எப்போது வேண்டுமானாலும் கதிர் வெளியேறலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவியாவும் படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறியது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்த வார டார்கெட் ஷிவின் தான்? இப்பவே வேலைய ஆரம்பிச்சுட்டாங்க! வெளியான ப்ரோமோ!!

இந்நிலையில் கதிரும் அந்த சீரியலில் வெளியேறுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் இவரை தொடர்ந்து ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் சாய் காயத்திரியும் வெள்ளித்திரையில் டப்பிங் ஆர்டிஸ்டாக களமிறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவரும் சீரியலில் இருந்து விலகினால் டிஆர்பி கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதை எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சமாளிக்க போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here