மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளத்தடை – மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

0

தற்போது அனைத்து பகுதிகளிலும் மனித கழிவுகளை சில குறிப்பிட்ட மனிதர்கள் தான் சுத்தம் செய்து வருகின்றனர். தற்போது இதற்கு பாட்னா மாநகராட்சி தடை செய்துள்ளது.

பீகார்:

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மனித கழிவுகளையும் மற்றும் கழிவுநீர் தொட்டிகளையும் குறிப்பிட்ட சில மனிதர்கள் தான் சுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது இந்த நிலையை மாற்ற பாட்னா மாநகராட்சி ஓர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி பாட்னா மாநகராட்சி கூறியதாவது, இனி மனித கழிவுகளையும் மற்றும் கழிவுநீர் தொட்டியையும் மனிதர்கள் சுத்தம் செய்வதற்கு தடை என்று அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மனிதர்களுக்கு பதிலாக சிலந்தி வடிவிலான இயந்திரத்தை பயன்படுத்தி மனித கழிவுகளையும் மற்றும் கழிவுநீர் தொட்டியையும் சுத்தம் செய்ய பாட்னா மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் அவையுடன் பாட்னா ஒப்பந்தம் செய்துள்ளாது.

#INDvsENG 2வது டெஸ்டில் ரோஹித் 150, ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்திய அணி!!

மேலும் மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவை பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பகுதிகளை முன்னேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பாட்னாவில் ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏழை மக்களுக்காக சாலை ஓரத்தில் சுமார் 25கும் மேற்பட்ட பொதுக்கழிப்பறைகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here