சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீஸ்….,படக்குழு அறிவிப்பு…,

0
சிம்புவின் 'பத்து தல' திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீஸ்....,படக்குழு அறிவிப்பு...,
சிம்புவின் 'பத்து தல' திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீஸ்....,படக்குழு அறிவிப்பு...,

நடிகர் சிம்பு நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு இதுவரை 45 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில், ‘பத்து தல’ திரைப்படம் நடிகர் சிம்புவின் 45 ஆவது திரைப்படம் ஆகும். அந்த வகையில், இன்னும் திரைக்கு வராத இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சென்னைக்கு வந்திறங்கிய தோனி….,ஆரம்பமாகும் CSK யல்லோ ஃபீவர்…,

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில், ஆக்சன் த்ரில்லர் வகையாக உருவாக்கப்பட்டுள்ள ‘பத்து தல’ திரைப்படம் இம்மாதம் 30 ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்னதாக, இத்திரைப்படத்திற்கான டீசர் நாளை மாலை 5:31 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here