OTT இல் கலக்க வரும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம்…., நாளை ரிலீஸ்….,

0
OTT இல் கலக்க வரும் 'தி லெஜண்ட்' திரைப்படம்...., நாளை ரிலீஸ்....,
OTT இல் கலக்க வரும் 'தி லெஜண்ட்' திரைப்படம்...., நாளை ரிலீஸ்....,

லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் ரிலீஸ்

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் முதன் முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதுல்லா, யாஷிகா ஆனந்த், நடிகர் விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீஸ்….,படக்குழு அறிவிப்பு…,

அந்த வகையில், பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘தி லெஜண்ட்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை (மார்ச் 3) ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here