நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்துதல’ திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
சிங்கிள் ரிலீஸ்
ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்துதல’. இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், ‘பத்துதல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் இணையதளத்தில் வெளியாகி வரவேற்புகளை பெற்றிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதை தொடர்ந்து, இன்று ‘பத்துதல’ திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ‘நினைவிருக்க’ என்று துவங்கும் பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத, ஏஆர் அமீன் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். இசைப்புயர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
புதிய படத்தில் நடிகர் அருள்நிதி….,ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்…..,
இந்த டூயட் பாடலில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் ‘பத்துதல’ திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Time for a Journey Down Memory Lane!
Revisit your moments of unfading love with the most melodious and soulful song now.
Second Single #Ninaivirukka from #PathuThala in the mesmerizing vocals of #ARAmeen & #ShakthisreeGopalan is Out Now 🪄
💟🔗 https://t.co/gkrW1HHQbJ pic.twitter.com/pWdn5eiJWY
— Studio Green (@StudioGreen2) March 13, 2023