6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேபிடல்ஸ்…, மந்தனாவின் RCB மீண்டும் தோல்வி!!

0
6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேபிடல்ஸ்..., மந்தனாவின் RCB மீண்டும் தோல்வி!!
6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேபிடல்ஸ்..., மந்தனாவின் RCB மீண்டும் தோல்வி!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், RCB அணியானது, 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

WPL:

மும்பையில் நடைபெற்று வரும், மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், மந்தனா தலைமையிலான RCB அணி நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால், RCB அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மந்தனா மற்றும் சோஃபி டெவின் களமிறங்கினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மந்தனா 8 ரன்களிலேயே வெளியேறி பெரும் ஏமாற்றத்தை தந்தார். இவரை தொடர்ந்து, சோஃபி டெவின் 27 ரன்கள் எடுத்து ஷிகா பாண்டே பந்தில் போல்டானார். இதனால், அணியின் ஸ்கோரை உயர்த்த எல்லிஸ் பெர்ரி 67*, ஹீதர் நைட் (11), ரிச்சா கோஷ் (37) மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் 4* போராடினர். இதன் விளைவால், RCB அணியானது 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்திருந்தது.

இந்த இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி (38), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), மரிசான் கேப் (32*) மற்றும் ஜெஸ் ஜோனாசென் (29*) ரன்கள் எடுத்திருந்து. இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் RCB அணியானது WPL ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here