மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் ‘பத்து தல’ திரைப்படம்….,வெளியான அடுத்த அப்டேட்….,

0
மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் 'பத்து தல' திரைப்படம்....,வெளியான அடுத்த அப்டேட்....,
மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் 'பத்து தல' திரைப்படம்....,வெளியான அடுத்த அப்டேட்....,

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தகவல் அளித்துள்ளது.

பத்து தல படம்

என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஆக்ஷன் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு 45 ஆவது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

என்னமா இப்படி பண்றீங்களே மா….., ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சொதப்பல்ஸ்….,கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வர இருப்பதாக படக்குழு தகவல் அளித்துள்ளது. அதற்கு முன்னதாக, ‘பத்து தல’ படம் குறித்த புதிய அப்டேட் மார்ச் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here