செப்டம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து – மத்திய ரயில்வே துறை அறிவிப்பு!!

0

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை அனைத்து வகை பயணியர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ரயில் சேவைகள் ரத்து:

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து (பேருந்துகள், ரயில்கள்) சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரயில்வே மற்றும் பேருந்து போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

train
passenger train

ஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் இல்லை – மலை உச்சிக்கு ஏறிய மாணவர்கள்!!

இருப்பினும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இயக்கப்படும் சிறப்பு ரயில்களும், சரக்கு ரயில்களும் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு உள்ள டிக்கெட்களுக்கு இழப்பீடு தொகை திருப்பி வழங்கப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here