டேஸ்டியான ஈவினிங் ஸ்னாக்ஸ் “பன்னீர் பாப்கார்ன்” – குழந்தைகள் விரும்பும் ரெசிபி!!

0

தற்போதைய காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பதார்த்தம் என்றால், அது பன்னீரில் செய்யப்படும் உணவுகள் தான். இதில் அதிகளவில் ப்ரோட்டீன் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது. இன்று பன்னீரை வைத்து செய்யப்படும் “பன்னீர் பாப்கார்ன்” ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 150 கிராம்
  • கார்ன் பிளக்ஸ் – 100 கிராம்
  • மைதா மாவு – 3 டீஸ்பூன்
  • சோள மாவு – 3 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 4 (அரைத்து)
  • வெங்காயம் – 1/2 (அரைத்து)
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில், பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு நன்றாக கிண்டி கொள்ளவும். பின், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிண்டி கொள்ள வேண்டும்.

பயில்வானுக்கு செம மாத்து விட்ட சிரஞ்சீவி – ஆடுன ஆட்டம் சும்மாவா??

ஒரு தட்டில் கார்ன் பிளக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின், எடுத்து வைத்துள்ள பன்னரில் அதனை போட்டு பிரட்டி எடுக்கவும். பன்னிரை தனி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், இதனை ஒரு அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும். பின், இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். இதனை அப்படியே சூடாக பரிமாறலாம். அவ்ளோ தான்!!

டேஸ்டியான ஈவினிங் ஸ்னாக்ஸ் “பன்னீர் பாப்கார்ன்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here