வீட்டில் தனது காதலியை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – எப்படியோ சாதிச்சிட்டிங்கா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனாக நடித்து கொண்டிருக்கும் சரவணவிக்ரம் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் விக்ரம். மேலும் இதற்கு முன் பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி பையனாக தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மனதை கொள்ளைகொண்டார்.

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அவரின் நடிப்பில் ஒரு குறை சொல்ல முடியாது. கடைசி பையனுக்கே உரிய சேட்டை, பொறுப்பில்லாதத்தனம் என தத்ரூபமாக நடித்திருப்பார். கண்ணன் மட்டுமல்ல அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான்.

அதனால் தான் இந்த சீரியல் டாப் ஹிட். தற்போது கண்ணனுக்கு வேறு ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஐஸ்வர்யா பிரஷாந்த்துக்கா?? கண்ணனுக்கா?? என்ற பெரிய குழப்பமும் இருந்து வருகிறது.

கண்ணன் இப்பொழுது தான் படித்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் இந்த காதலை ஏற்றுக்கொள்வாரா?? என்று பார்த்தால் அது சந்தேகம் தான். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் வீட்டில் அம்மா, தங்கை. காவியா மற்றும் சீரியலில் தனது ஜோடியான ஐஸ்வர்யாவுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் மருமகளை கண்ணன் வீட்டில் அறிமுகப்படுத்தி விட்டார் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here