இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…. சதத்தை நெருகிங்கிவிடுமா ??? – கலக்கத்தில் மக்கள்!!!

0

தொடர்ந்து ஏறுமுகத்தையே  கொண்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்றோ நேற்றைய விலையிலேயே நீடிப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது . அதாவது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.14-க்கும்  மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.92.31-க்கும் நேற்றைய விலையிலையே இன்றும்  தொடர்கிறது.

நடுத்தர மக்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்யும் மக்களுக்கும் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். இன்னும் சில நாட்களின் பெட்ரோல் விலை சதத்தை அடிக்கும் என்றே எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிலையை சில மாநிலங்கள்  அடைந்து விட்டன. அதாவது மும்பை,டெல்லி,கொல்கத்தா  போன்ற பெரு நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது.

அதன் அடிப்படையில், இன்றைய நிலவரப்படி, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.08க்கும்  மற்றும் டீசல் ரூ.95.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயிக்கின்றனர்.

அதன் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 98.14-ரூபாய்க்கும்  மற்றும்  92.31-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here