புது வீட்டில் பால் காய்ச்சி மூர்த்தி வீட்டிற்கு வந்து கொடுக்கும் ஐஸ்வர்யா – கடுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் மூர்த்தி வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே குடியேற ஐஸ்வர்யா, பால் காய்ச்சி அதனை கொண்டு போய் தனம், மீனாவிற்கு கொடுக்க இதனால் குடும்பமே கடுப்பாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா நேற்றைய எபிசோடில் மீனாவை வம்புக்கு இழுக்க அவர் தனத்தை அழைத்து வந்து காட்டுகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா மீனாவிடம் எதாவது ஹெல்ப்புக்கு வரவா?? என்று கேட்கிறார். இதனை கேட்ட மீனா திரும்பிக்கொண்டு செல்கிறார்.

அடுத்ததாக வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் எடுத்து வைத்து கொண்டு இருக்க கஸ்தூரி பின் வாசல் வழியாக வருகிறார். ஐஸ்வர்யா ஏன் இப்படி வரீங்க என்று கேட்க தனத்திற்கு தெரிந்தால் சங்கடம் என்று சொல்கிறார். மேலும் தன் கணவருக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்றும் சொல்கிறார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா புது வீட்டில் பால் காய்ச்ச ஆரம்பிக்கிறார். நிறைய பால் உற்ற எதற்கு என்று கேட்கிறார் கஸ்தூரி. எதிர் வீட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்ல கண்ணன் வேண்டாம் என்று சொல்கிறார். காலையிலேயே எதற்கு இப்படி கடுப்பேற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

இதனை கேட்டு கடுப்பான கஸ்தூரி, அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து கொள்ள தான் இங்க உங்களை குடி வச்சேன் என்று சொல்கிறார். அடுத்ததாக மூர்த்தி வீட்டில் அனைவரும் சந்தோசமாக உள்ளனர். கயலை கொஞ்சி கொண்டுள்ளனர். அப்பொழுது பார்த்து ஐஸ்வர்யா உள்ளே பால் கொண்டு வருகிறார்.

இதனை பார்த்த மீனா அவரை தடுக்க ஆனால் ஐஸ்வர்யா விடுவதாக இல்லை. நேராக சென்று அனைவரிடம் தான் எதிர் வீட்டில் குடி வந்துள்ளதாகவும் பால் காய்ச்சி எடுத்து வந்ததாகவும் சொல்கிறார். மேலும் தன் கணவருக்கும் இதே போல பெரிய குடும்பம் இருப்பதாகவும் சொல்கிறார்.

யாரும் பாலை எடுத்துக்கொள்ளாததால் அங்கேயே வைத்து விட்டு செல்கிறார். கண்ணனிடம் வந்து நடந்தவற்றை சொல்ல எப்படியும் நம்மள எதுக்குவாங்க என்று சொல்லி சமாதானம் செய்கிறார் கண்ணன்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here