நீங்க இப்படி பண்ணுங்க என்று கெஞ்சி கூத்தாடிய வலிமை இயக்குனர் – வாய்ப்பே இல்லை என்று மறுத்த நடிகர் அஜித்!!

0

சினிமா படப்பிடிப்பு தளத்தில் தான் சில விஷயங்களை செய்ய சொன்னதாகவும், ஆனால் நடிகர் அஜித் அனைத்தையும் மறுத்து விட்டதாக வலிமை இயக்குனர் H.வினோத் தெரிவித்துள்ளார்.

மறுப்பு சொன்ன அஜித்:

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அண்மையில் உருவான படம் வலிமை.  இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது நடிகர் அஜித்திடம் சில விஷயங்களை செய்ய சொன்னதாக இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.  அதாவது, பைக்கில்  அஜித் இருப்பது போன்ற காட்சியில் ஹெல்மெட் போடாமல் இருந்தால் தான் ரசிகர்களுக்கு உங்கள் முகம் தெரியும் என்றும் சொன்ன போது, ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுவது விதிமீறல் அதை நான் செய்ய மாட்டேன் என்று அஜித் மறுத்து விட்டாராம்.

அது மட்டுமில்லாமல், ஒரு சீனில் ஹாரன் அடிச்சுகிட்டே கார் ஓட்டணும் என்று சொன்ன போது, அதிக ஒலி மிகவும் ஆபத்து என்று சொல்லி அதையும் மறுத்து விட்டார் என வினோத் ஒரு பேட்டியில் தற்போது தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இவர் ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோ தான் என்று பாராட்டியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here