கதிருடன் பைக்கில் ஒன்றாக வரும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மளிகை கடையை விரிவுபடுத்த தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் முதல் படியாக டோர் டெலிவரிக்கான அனைத்து போஸ்டர்களையும் தயார் செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவிற்கு ஜனார்தனனின் சூழ்ச்சி தெரியவர சூப்பர் மார்க்கெட்டை விட்டு கிளம்புகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸை அழிக்க நெனச்சா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபமும் விடுகிறார். இதனால் ஜனார்த்தனன் அதிர்ச்சியாகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் குழந்தையை வாங்கிக்கொண்டு வெயில் என்று கூட பார்க்காமல் நடந்து செல்கிறார். அப்பொழுது கதிர் வண்டியில் அந்த பக்கமாக வர மீனாவை பார்த்து அருகில் செல்கிறார். திடிரென பக்கத்தில் வந்தவுடன் செயின் புடுங்குபவர் என்று நினைத்து அலறுகிறார்.

பின்பு கதிரை பார்த்ததும் அமைதியாகிறார். என்ன இந்த வெயிலில் நடந்து வரீங்க என்று கேட்க அப்பாவிடம் சண்டையிட்டு வந்ததாக சொல்கிறார். கதிரும் பாவம் நீங்க இன்னும் எத்தனை பேருகிட்ட தான் சண்டை போடுவீங்க என்று கலாய்க்க மீனா கோவமாகிறார். கடைசியில் கதிர் வீட்டில் இறக்கி விடுகிறார்.

8 வருடங்களுக்கு பிறகு பாரதி வீட்டிற்கு வரும் லட்சுமி – சந்தோசத்தில் குதிக்கும் சௌந்தர்யா!!

கதிரை சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வர சொல்கிறார். உங்களுடன் நான் வண்டியில் வந்தது தெரிந்தால் முல்லை திட்டுவா என்று சொல்ல அதற்கு கதிர் என் முல்லை அப்படி பட்டவள் கிடையாது என்று சொல்கிறார். அடுத்து இருவரும் உள்ளே செல்கின்றனர். அப்பொழுது தனம் குழந்தையை குளிப்படுவதாக அழைத்து செல்ல மீனாவும் சென்றதும் முல்லை கதிரை திட்டுகிறார்.

யாரை கேட்டு மீனாவை வண்டியில் கூட்டிட்டு வந்தீங்க என்று சொல்கிறார். இதனை மீனா கேட்டுவிட இதை தானா நானும் சொன்னேன் நம்ப மாட்டேன் சொன்னிங்க. இப்போ பாத்திங்களா என்றது கலாய்க்கிறார். அடுத்ததாக டோர் டெலிவரிக்கு செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர். போஸ்டர் ஓட்ட கதிர் ஆளை அழைத்து வருகிறார்.

வந்தவர்கள் அளவுக்கு அதிகமாக பணம் கேட்டு சண்டையிடுகின்றனர். அவர்களிடம் சண்டை போட்டு அனுப்பி வைக்கின்றனர். கடைசியாக நாமே ஓட்டலாம் என்று முடிவெடுக்கின்றனர். மீனா கடையில் பசை எடுத்து வர சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here