தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

வானிலை நிலவரம்:

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஏப்ரல் 12) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாளை(ஏப்ரல் 13) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 14.04.2021 அன்று தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, தேனீ, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல், காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். வருகிற 15.04.2021 ஆண்டு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வருகிற 16.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உசிலம்பட்டி, குழித்துறை தலா 4 செ.மீ, ஜெயன்கொண்டன், திருபுவனம் தலா 3, வாலிநோக்கம், பிளவக்கல், கொடைக்கானல் தலா 2, ஆண்டிபட்டி, வலங்கைமான், ஆழியார், கெட்டி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்வதற்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here