பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சூப்பர் அட்வைஸ் – கரெக்ட்டா 4 மணிக்கு வந்து சேருங்க!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனம் தற்போது லாக்டவுனில் புதிய வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் நேற்று இன்று சினிமா துறையில் இல்லை. இவரின் சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். சத்யராஜ் படத்தில் ஆரம்பித்து தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து வருகிறார்.

அஜித் தங்கையாகவும் வாலி படத்தில் நடித்து விட்டார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சுஜிதா என்றால் தெரியாத ஆளில்லை. மேலும் விஜய் டிவியில் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றினார்.

இந்நிலையில் தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெலுங்கிலும் இதே சீரியலில் நடித்து வருகிறார். தனமான இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தம்பிகளை இவ்வளவு தூரம் வளர்த்தற்கு தனத்திற்கும் நிறைய பங்கு உள்ளது.

தற்போது தான் தனம் கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோசத்தில் தான் குடும்பமே உள்ளது. இந்நிலையில் லாக்டவுன் காரணமாக சீரியல் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஆனாலும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளார். மேலும் பச்சை பசேலென இருக்கும் இடத்தில் அமர்ந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் 4 மணிக்கு லைவில் வரவுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here