சிக்கன்,முட்டை ஆன்லைனில் விற்க அனுமதி !!! காவல் ஆணையருக்கு கடிதம்!!!

0

சிக்கன், முட்டைகள் ஆகியவற்றை ஆன்லைன் விற்பனை தளங்கள் (e-commerce) மூலம் விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால் கடிதம் எழுதி உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு கட்டுப்பாட்டால், கோழி, முட்டை விற்பனையில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோழி இறைச்சியை, வீடுகளுக்கே நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோழி இறைச்சியை, புரத சத்துமிக்க உணவு என  மத்திய அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு கறிக்கோழி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது , கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கடந்த 22 ஆம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில், வேளாண் விளை மற்றும் இடுபொருட்களை ஊரடங்கு காலத்தில் கொண்டு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இந்த உத்தரவின்படி உணவகங்களில் இருந்து உணவு வகைகளை இ-காமர்ஸ் மூலம் விற்கவும் அனுமதி உள்ளது.

எனவே இது போன்று முட்டை மற்றும் சிக்கனை விற்கவும் அனுமதிக்க வேண்டும். உணவகங்களிலும், தேவையான இடங்களிலும் உணவு தயாரிக்க உதவும் வகையில் முட்டை மற்றும் சிக்கனை இ காமர்ஸ் முறையில் தடையின்றி கொண்டு செல்ல அனுமதி  அளிக்குமாறு அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here