50 மெகாபிக்சல் கேமராவுடன் OPPO ரெனோ 5 ப்ரோ பிளஸ் – விரைவில் அறிமுகம்!!

0

OPPO நிறுவனத்தின் புது மாடல் ஆன ரெனோ 5 ப்ரோ பிளஸ் விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. மேலும் அதற்கான கேமரா அம்சங்களை OPPO நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

OPPO ரெனோ 5 ப்ரோ பிளஸ்:

டிசம்பர் 24 அன்று ரெனோ 5 ப்ரோ பிளஸ் சீனாவில் வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த மாடலுடன் ரெனோ 5 மற்றும் ரெனோ 5 ப்ரோ மாடல்களும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் OPPO நிறுவனம் தனது ரெனோ 5 ப்ரோ ப்ளஸ்சின் அம்சங்களை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, OPPO ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 50 எம்.பி சோனி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வர உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


மேலும் ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல்கள் கொண்ட சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சாரை கொண்டிருக்கும். இது OPPO மற்றும் சோனி நிறுவனங்கள் ரெனோ 5 ப்ரோ ப்ள்ஸ்க்கு மட்டுமே உருவாக்கிய ஸ்பெஷல் சென்சார் ஆகும்.

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு!!

இந்த ஸ்மார்ட்போன குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர், 65W பாஸ்ட் சார்ஜிங், 32 எம்பி செல்பி கேமரா, பஞ்ச்-ஹோல் 6.55 இன்ச் AMOLED 90Hz ரீப்ரெஷ் ரேட் டிஸ்பிளே உடன் வர உள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி உடையது.

5000 mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் – மோட்டோரோலா கேப்ரி!!

மேலும், OPPO ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 4500 mAh பேட்டரி உடன் வருகிறது. இவை அனைத்தும் OPPO நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். மேலும் இதற்கான விலை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவருமா?? என்ற தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here