5000 mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் – மோட்டோரோலா கேப்ரி!!

0

மோட்டோரோலா நிறுவனம் இரண்டு புதிய மாடல் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. விரைவில் இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று அறிவித்துள்ளது. இதன் சிறப்பம்சம் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மோட்டோரோலா:

இந்நிறுவனம் மோட்டோரோலா கேப்ரி மற்றும் மோட்டோரோலா கேப்ரி பிளஸ் என்னும் இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. இந்த 2 மாடல்களும் விரைவில் வெளிவரும் என்பது உறுதியாகிவிட்டது. காரணம்,மோட்டோரோலா கேப்ரிஸ் மார்ட்போன் எஃ ப் .சி.சி என்னும் சான்றிதழான இணையதளத்தில் காணப்படுகிறது. அந்த சான்றிதழில் மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி-2127 என்ற பெயரில் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போனின் 4 ஜி எல்டிஇ ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகளை பற்றி மட்டுமே கூறுகிறது. கேப்ரி மாடலில் 19W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000 mAh பேட்டரி இருக்கும்.

டீ விற்று ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டும் இளைஞர்!!

டிஸ்பிளே – எச்டி + ரிசொலுஷன் & 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்
கேமரா – 48 MP + 2 MP + 2 MP + 8 MP
8 மெகாபிக்சல் சாம்சங் எஸ் 5 செல்பீ கேமரா இடம் பெறலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் 460 ப்ராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here