டீ விற்று ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டும் இளைஞர் – அவரது வெற்றிக்கான ரகசியம் இது தான்!!

0

பலரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து வாழ்க்கையில் முன்னேறுகின்றனர். ஆனால், சிலர் தாங்களாகவே வாய்ப்புகளை உருவாக்கி வாழ்வில் வெற்றி அடைகின்றனர். அந்த வகையில் புனே மாநகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீ விற்று அதன் மூலமாக மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

வாய்ப்புகளை உருவாக்கியவர்:

வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும் போது தான் அனைவருக்கும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை எழுகின்றது. அப்படி ஒருவர் தான் புனே மாநகரத்தை சேர்ந்த ரேவன் ஷிண்டே என்ற இளைஞர். அவர் கடந்த ஆண்டு வேலை தேடுவதற்காக புனே வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவருக்கு ஒரு வாட்ச்மேன் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வேலை கொரோனா பொது முடக்கம் காரணமாக பறிபோய் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வதென்றே ரேவனுக்கு தெரியவில்லை. அதன் பிறகு சில நொறுக்கு தீனி கடைகளில் வேலை பார்த்துள்ளார். அந்த வேலையும் பறிபோக தானாகவே ஒரு நொறுக்கு தீனி கடையினை ஆரம்பித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக யாரும் பொருட்களை வாங்க முன் வராததால் அவரே நேரில் சென்று அனைவருக்கும் வழங்கியுள்ளார். முதன் முதலாக தன்னிடம் வாங்குபவர்களுக்கு அவர் இலவசமாக டீ வழங்கியுள்ளார்.

அசத்திய உழைப்பு:

அவர் கைப்பக்குவம் பிடித்து போய் அவரது டீயினை பலரும் வாங்கி குடித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அதிகமாக சேர்ந்ததால் அவர் தனது டீயிற்கு ஒரு விலையினை நிர்ணயித்து விற்றுள்ளார். அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக டீ வந்து விடும். இந்த தொழில் மூலமாக அவர் தற்போது ஒரு மாதத்திற்கு 2 லட்சம் வரை சம்பாதித்து வருகின்றார்.

பார் திறப்பிற்கு அனுமதி தாருங்கள், இல்லையெனில் டாஸ்மாக்கு பூட்டு !!

ஒரு நாளைக்கு 700 டீ வரை விற்று வருகின்றார். தனது டீ வியாபாரத்தை ஆன்லைன் வாயிலாகவும் செய்து வருகின்றார். இவருக்கு கீழ் தற்போது 5 பேர் வேலை செய்து வருகின்றனர். வாய்ப்புகளை தேடி அலையாமல் தனக்குள் இருக்கும் திறமையினை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைந்த இவரது உழைப்பு இன்று பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here