இந்த ஹேர் பேக் ஒன்னும் போதும்.., உங்க முடி செழிப்பாக வளர! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
இந்த ஹேர் பேக் ஒன்னும் போதும்.., உங்க முடி செழிப்பாக வளர! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
இந்த ஹேர் பேக் ஒன்னும் போதும்.., உங்க முடி செழிப்பாக வளர! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

நம் உடலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதற்காக நம் உணவில் வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்திருப்போம். ஆனால் இப்போது இந்த வெங்காயத்தை பயன்படுத்தி எவ்வாறு தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • சின்ன வெங்காய சாறு – 100 கிராம்
  • நெல்லிக்காய் பொடி – 3 டீஸ்பூன்
  • கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடியை வாங்கி கொள்ளவும். இப்போது ஒரு 20 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இதன் பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டில் இருந்து அதன் சாறை தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இந்த சாறுடன் நெல்லிக்காய் பொடி 3 டீஸ்பூன் சேர்க்கவும். இதோடு 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் தலை முடியில் அப்ளை செய்து, ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு சீயக்காய் போட்டு தலை முடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை மாதத்தில் 2 முறை பாலோவ் செய்வதன் மூலம் நம் தலைமுடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here