ஓமைக்ரான் ஒன்றும் கடைசி கிடையாது.. இதுக்கு மேல தான் இருக்கு – உலக சுகாதார தலைவர் எச்சரிக்கை!!

0

கொரோனா வைரஸின் கடைசி உருமாற்றம் ஓமைக்ரான் தான் என, மக்கள் எளிதாக நினைத்து விடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் எச்சரித்துள்ளார்.

பகிரங்க எச்சரிக்கை:

கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. டெல்டா பரவலை விட ஓமைக்ரான் சற்று வீரியம் குறைவானதாக இருந்தது. இதனால் ஓமைக்ரான் வைரஸ் தான் கொரோனாவின் உருமாறிய கடைசி வைரஸ் என்று மக்கள் நினைத்து விடக்கூடாது என, உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஓமைக்ரான் போன்ற இன்னும் பல உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உருவாகலாம் என்றும், இவை அனைத்தும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் இனி உருவாகும் வைரஸ்கள் தடுப்பூசி செயல்திறனை குறைக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here