‘ஒளிரும் தமிழ்நாடு’ – தொழில் மாநாட்டை துவக்கி வைக்கிறார் முதல்வர்..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் தொழில் துறையினர் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்கிற மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைக்கிறார்.

ஒளிரும் தமிழ்நாடு:

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏற்கனவே 11 ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு முதலவர் அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். மேலும் 11 ஆயிரம் கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொழில் துறையில் முன்னணிக்கு கொண்டு வர இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்கிற பெயரில் காணொளி மாநாடு இன்று தொடங்கப்பட உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கமல்ஹாசனின் ‘நாமே தீர்வு’ – கொரோனவை விரட்ட தன்னார்வலர்கள் திட்டம்..!

அத்துடன் சேர்த்து தமிழகத்தின் தொழில் வளம் மற்றும் கையேட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிடுகிறார். இதில் 500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் ஹரி கே தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ் மற்றும் சந்தானம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டில் தமிழகத்தில் புதிய முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் தொழில் துறையை முன்னேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here