உலக கோப்பைக்கான நேரடி தகுதியை இழக்க இருக்கும் இலங்கை…, ஐசிசியால் அபராதம் விதிப்பு!!

0
உலக கோப்பைக்கான நேரடி தகுதியை இழக்க இருக்கும் இலங்கை..., ஐசிசியால் அபராதம் விதிப்பு!!
உலக கோப்பைக்கான நேரடி தகுதியை இழக்க இருக்கும் இலங்கை..., ஐசிசியால் அபராதம் விதிப்பு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐசிசி உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இலங்கை அணி:

இந்தியாவில் அக்டோபர் மாதம், ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்காக, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 13 அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வந்தது. இதில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாக தகுதி பெறும். தற்போது வரை, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீதமுள்ள ஓர் இடத்திற்கு தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில், இலங்கையானது, இந்த இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி புள்ளிகளில் சரிவை சந்தித்தது.

மகளிருக்கான ரூ.1,000 உதவித்தொகை வேணும்னா ரூ.200 கொடு.., ., மோசடி கும்பலின் புதிய யுக்தி!!!

இதனை தொடர்ந்து, இந்த முதல் ஒருநாள் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இலங்கை அணி ஓவர்களை விசா தவறியாதல், ஸ்லோ ஓவர்-ரேட் குற்றத்தின் அடிப்படையில், போட்டிக்கான கட்டணத்தில் இருந்து, ஒவ்வொரு ஓவருக்கும் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஐசிசி புள்ளிப்பட்டியலிலும், ஒரு புள்ளியை இழந்துள்ளது. இதன் விளைவால் தற்போது, இலங்கை அணி 81 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ளது. இந்த புள்ளி குறைப்பால், இலங்கை அணி உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெறுவதில் அபாயம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here