ஐசிசி விருது 2022: அனைத்து வடிவிலும் சிறந்த வீராங்கனை பட்டியல் வெளியீடு…, பரிந்துரையில் இந்தியாவின் மந்தனா!!

0
ஐசிசி விருது 2022: அனைத்து வடிவிலும் சிறந்த வீராங்கனை பட்டியல் வெளியீடு..., பரிந்துரையில் இந்தியாவின் மந்தனா!!
ஐசிசி விருது 2022: அனைத்து வடிவிலும் சிறந்த வீராங்கனை பட்டியல் வெளியீடு..., பரிந்துரையில் இந்தியாவின் மந்தனா!!

ஐசிசியானது இந்த வருடத்தில் கிரிக்கெட் தொடர்களில் மூன்று வடிவிலும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை என்று விருதுக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விருதானது, ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், வீராங்கனை பட்டியலில், கடந்த ஆண்டு இந்த விருதை வென்ற இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 38 போட்டிகளில் 1290 ரன்கள் அடித்ததன் மூலம் நடப்பு ஆண்டும் பரிந்துரையில் இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரை தொடர்ந்து, இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் 33 போட்டிகளில் 1346 ரன்கள் மற்றும் 22 விக்கெட்டுகள், நியூசிலாந்தின் அமெலியா கெர் 32 போட்டிகளில் 1003 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 25 போட்டிகளில் 915 ரன்கள் என இந்த வருடம் 3 வடிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மறைந்த கால்பந்து நட்சத்திரம் பீலே பற்றி அறிந்ததும் அறியாததும்…, சில துளிகள்!!

ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் (44 போட்டிகளில் 2598 ரன்கள்), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (28 போட்டிகளில் 1066 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகள்), ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (39 போட்டிகளில் 1380 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகள்) மற்றும் நியூசிலாந்தின் டிம் சவுத்தி (31 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்) பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளனர். இவர்களில், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here