நோக்கியா 3310 செல்போனை முழுங்கிய 33 வயது நபர் – அரண்டு போன மருத்துவர்கள்!!

0

ஐரோப்பாவில் 33 வயது மதிக்கத்தக்க நபர் நோக்கியா போனை விழுங்கியதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த போன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.

போனை விழுங்கிய வினோதம்:

நமது பக்கத்துக்கு கண்டமான ஐரோப்பாவில் ஒரு வினோதமான செயல் நடந்துள்ளது. பழைய கால மொபைல் போனான அதாவது, 90ஸ் களில் மிக சிறந்த போனாக நோக்கியா பட்டன் போன் இருந்தது.  மிக துல்லியமான அலைவரிசையையும், வாடிக்கையாளர்களுக்கான கண் கவரும் ஆபர்களையும் இந்த போன் நிறுவனத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


இத்தகு புகழ் பெற்ற நோக்கியாவின் 3310 ரக போனால் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.  அதாவது, ஐரோப்பாவின் கொசவோவை சேர்ந்த 33 வயது கொண்ட ஒருவர் இந்த போனை விழுங்கி விட்டார்.  உணவுக்குழாயில் நுழைந்த இந்த போன் அந்த நபரின் வயிற்றுக்குள் போயிருப்பது எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டது.  இதனை அந்த நாட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.


இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், செல்போனை விழுங்கியவரின் எக்ஸ்ரே படத்தையும், அவர் வயிற்றுக்குள் இருந்து வெளியே எடுத்த அந்த நோக்கியா மொபைல் படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் எதுக்காக? எப்படி? இந்த போனை விழுங்கினார் என்ற விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here