‘இந்தியாவில் 22 மாதங்களாக ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்கவில்லை’ – ரயில்வே மந்திரி தகவல்!!

0

கடந்த 22 மாதங்களாக இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில், பயணிகள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு தான் கடைசி ரயில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழப்பு

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், மக்கள் பயன்படுத்தும் சாலை, ரயில் போக்குவரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களை இத்தகைய விபத்திலிருந்து பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு சாலை விதிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் சாலை விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரொமான்டிக் சீன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்த வகையில் ரயில் போக்குவரத்தில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக எந்த விபத்தும் ஏற்படவில்லை என மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பயணி இறந்தது தான் ரயில் விபத்தில் ஏற்பட்ட கடைசி உயிரிழப்பு. அதன் பிறகு 22 மாதங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய ரயில்வேயில் முதன் முதலாக மறுசீரமைக்கப்பட்ட புதிய ரயில்வே வாரியத்தில், ரயில்வே பாதுகாப்புக்கான இயக்குனர் ஜெனரலை ஏற்படுத்தியுள்ளோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here