4வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய காலை நிலவரம்!!

0

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை இன்று 4வது நாளாக தொடர்ந்து அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருந்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை வெளியாகியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

கொரோனா காலத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது தங்கத்தின் விலை. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரன் 40,000 ரூபாயை தாண்டி வரலாற்று சாதனை படைத்தது. இதனால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். அதன்பின்பு கடந்த 3 மாத காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. தற்போது இன்று 4வது நாளாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு – சிவில் ஏவியேஷன் அமைச்சகம் அறிவிப்பு!!

தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.35,864 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.41 குறைந்து தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,483 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளியும் தற்போது கிராமிற்கு 20 காசுகள் குறைந்து தற்போது 1 கிராம் வெள்ளி ரூ.73.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.73,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here