உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு – சிவில் ஏவியேஷன் அமைச்சகம் அறிவிப்பு!!

0

கொரோனா பரவலுக்கு பின்பு தற்போது பல தளர்வுகளுடன் விமான போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. தற்போது உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான போக்குவரத்து:

கடந்த கொரோனா காலங்களில் ஊரடங்கு காரணமாக பல துறைகள் பாதித்தது. அதில் ஒன்று தான் விமான சேவை. கொரோனா பாதிப்பால் விமான போக்குவரத்து சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தற்போது தங்களது ஊழியர்கள் சிலரை விமான நிறுவனங்கள் வெளியேற்றி வருகின்றனர். மேலும் சிலருக்கு சம்பளத்தை குறைத்தும் வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால் பல தளர்வுகளை விமான சேவைக்கு அரசு அறிவித்துள்ளது. எனவே தற்போது விமான போக்குவரத்துக்கு துறை தனது நிதி நிலைமையை சீராக்கும் பணியில் இறங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி விமான பயணத்தின் நேரம் அடிப்படையில் ஏழு பிரிவுகளாக பிரித்துள்ளது. மேலும் அதற்கு புதிய கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம். இதன்மூலம் தற்போது விமான பயண கட்டணங்களுக்கான வரம்புகளை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது புதிய கட்டணங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். முதலாவதாக குறைவான பயணம் அதாவது 40 நிமிட பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2000ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தியுள்ளனர்.

இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக் – அவதியில் பொது மக்கள்!!

மேலும் அதிகபட்ச கட்டணமாக 6000 ரூபாயில் இருந்து 7800 ரூபாயாக அதிகரித்துள்ளனர். அதேபோல் 150 முதல் 180 நிமிடம் பயணத்திற்கு குறைந்த பட்ச கட்டணமாக 6,100 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணமாக 20,400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளனர். 3 மணி நேரம் முதல் 3.30 மணி நேரம் பயணத்திற்கு குறைந்த்தபட்ச கட்டணமாக 7,200 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணமாக 24,200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளனர். இந்த புதிய கட்டண உயர்வு வரும் மார்ச் 31ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here