ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை – திருவள்ளூரில் நடந்த பரிதாபம்!!

0

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆன்லைன் விளையாட்டால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளான். ஆன்லைன் விளையாட்டினால் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டு:

ஆன்லைன் விளையாட்டினால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் எடுத்தும் தற்கொலைகள் குறைந்த பாடில்லை. தற்போது இதே போல் ஓர் சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் என்ஜிஓ நகரை சேர்ந்த பாபு என்பவரின் மகன் தான் ராகேஷ். இவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். வயது 13. இவன் கடந்த 4 மாத காலமாக ஆன்லைன் கேமினை விளையாடி வருகிறார். தற்போது தனது வீட்டு மாடியில் படிக்க செல்வதாக கூறி மாடிக்கு சென்ற ராகேஷ் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அவனது தாத்தா மாடிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளார். ஆனால் மாணவனின் சத்தம் ஏதும் கேக்காததால் அதிர்ச்சி அடைந்த அவனது தாத்தா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ராகேஷ் விசிறி கம்பியில் சேலை மூலம் தூக்கில் கிடந்த படி தொங்கியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்தார் அவனது தாத்தா. மேலும் இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.

#INDvsENG 2வது டெஸ்ட் – ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்!! இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையுமா??

மேலும் இதுகுறித்து மாணவனின் தந்தையிடம் போலீசார் விசாரித்தனர், அப்போது பாபு கூறியதாவது தனது மகன் 4 மாதமாக ஆன்லைன் கேம் விளையாடி வருகிறார். ஆன்லைன் செயலியை தனது போனில் இருந்து நீக்கிய நிலையில் மீண்டும் அதனை பதிவிறக்கம் செய்து தருமாரு கேட்டான். ஆனால் அதனை நான் மறுத்தேன் என்று கூறினார். மேலும் தமிழக அரசு இந்த ஆன்லைன் கேமினை மொத்தமாக நீக்க வேண்டும் என்றும் இதுபோல் வேறு எங்கும் துயர சம்பவம் நடக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஆன்லைன் கேமினால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவன் தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here