’10 திருக்குறள் கூறினால் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம்’ – கரூரில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0

கரூரில் 10 திருக்குறளை கூறுபவர்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும், 20 திருக்குறளை கூறினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும் பெட்ரோல் உரிமையாளர் அறிவித்துள்ளது. அந்த பகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் இலவசம்

பெட்ரோல் விற்கும் இன்றைய விலையில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படும் இந்த காலகட்டத்தில் பெட்ரோல் இலவசம் என்கிற அறிவிப்பு அனைத்து மக்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் நாகம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது வள்ளுவர் நகர். திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அதீத ஆர்வம் கொண்ட செங்குட்டுவன் என்ற தொழிலதிபர், திருக்குறளை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தொழிலதிபரான செங்குட்டுவன் என்பவர், அந்த பகுதியில் வள்ளுவர் பெயரில் கலை அறிவியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி, உணவு விடுதிகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் 10 திருக்குறளை சொல்லும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், 20 திருக்குறளை சொல்லும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் – விரைவு தரிசன டிக்கெட் அதிகரிப்பு!!

இதனால் அந்த பெட்ரோல் பங்கில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன் கூறும் போது, ‘இப்போது பெரும்பாலான மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லை. மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காகவும், இளையதலைமுறையினர் பண்போடு வளர அறநூலான திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காகவும் இலவசமாக பெட்ரோல் வழங்குகிறோம்’ என கூறினார். திருக்குறள் மீதான இவரது ஈடுபாடும், செயலும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here