கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் அறிவிப்பு..!

0

தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலர் சம்பந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்..!

சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 30 கிலோ தங்கம் சிக்கியது இதன் சர்வதேச மதிப்பு 15 கோடி ரூபாய். இந்நிலையில் நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக கேரள சட்டசபை வரும் 27ல் கூடுகிறது. அன்றைய தினம் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.

560 பல்கலைக்கழகங்கள் ஆதரவு – செமஸ்டர் தேர்வுகளை நடத்த யுஜிசி தீவிரம்!!

இது குறித்து கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நேற்று கூறியதாவது, முதல்வரின் முதன்மை செயலர் தங்கக் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். எனவே இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீசன் நோட்டீஸ் வழங்கியுள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here