Saturday, June 19, 2021

சென்னையில் பிளாஸ்மா வங்கி & ஹலோபதிக்கு முன்னரிமை – அமைச்சர் விஜயபாஸ்கர்!!

Must Read

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் சென்னையில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா சிகிச்சை:

தமிழகத்தில் நாட்கள் செல்லச்செல்ல கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களிலும் தீவிரமெடுக்கத் தொடங்கி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. வரும் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய பின்பு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டர்.

madurai corona virus ward
madurai corona virus ward

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு உடன் கொரோனா தடுப்பு பணிகள் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என தெரிவித்தார். மதுரை, சென்னை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். ஹலோபதி மற்றும் இயற்கை மருத்துவம் கலந்த சிகிச்சைக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சர்.கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -