ரூ.2000 நோட்டுக்கு தடையா?? புழக்கத்தில் இல்லாதது ஏன்?? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!!

0

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி பிரதமர் மோடி தடை செய்தார். இதன்பின் மக்களின் புழக்கத்திற்காக புதிய வடிவிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சமீப காலமாக ரூ.2,000 நோட்டுகளை விட ரூ.500 நோட்டுகள் தான் புழக்கத்தில் பெருமளவில் காணப்பட்டு வருகிறது.

இதனால் ரூ.2,000 நோட்டுகளை தடை செய்ய எதுவும் திட்டம் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்து வருவதால் ரூ.2,000 நோட்டு அச்சிடுவதற்கான தேவைகள் இல்லை. இதனால் கடந்த 2019-20ம் நிதியாண்டு முதலே ரூ.2,000 நோட்டு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக தெரிவித்து இருந்தார்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.., இத்தனை  பேர்  பயனடைவார்கள் .. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “கடந்த 2017ம் ஆண்டு மார்ச் முதல் 2022 மார்ச் வரை ரிசர்வ் வங்கி மூலம் ரூ.500 நோட்டுகள் 9.512 லட்ச கோடிக்கும், ரூ.2,000 நோட்டுகள் 27.05 கோடிக்கும் அச்சிடப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இதனால் ரூ.500-ஐ விட ரூ.2,000 தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. மக்களின் நிகழ்கால தேவைகளை மதிப்பீடு செய்தே வங்கிகள் ATM-ல் பணத்தை நிரப்பி வருகின்றனர். என விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here