குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.., இத்தனை  பேர்  பயனடைவார்கள் .. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

0
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.., இத்தனை  பேர்  பயனடைவார்கள் .. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.., இத்தனை  பேர்  பயனடைவார்கள் .. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் குறித்து பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதற்கேற்றார் போல் வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இத்திட்டம் செயல்படும் என நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.. இந்த தகுதி உடையவர்கள் குறித்து ஏற்கனவே அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அதன்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஆதரவற்றோர், தினக்கூலி பெண்கள், விதவை, விவாகரத்து பெண்கள், PHH, AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு.., அம்பலமான உண்மை சம்பவம் .., மின்வாரிய அதிகாரி விளக்கம்!!

மேலும் இதன்மூலம் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். எனவே இத்திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் பட்ஜெட்டில் இருந்து சுமார் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த தகுதி வாய்ந்தவர்கள் குறித்த விரிவான விபரங்கள் விரைவில் அரசாணை மூலம் தெரியப்படுத்தப்படும் என நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here