மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு.., அம்பலமான உண்மை சம்பவம் .., மின்வாரிய அதிகாரி விளக்கம்!!

0
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு.., அம்பலமான உண்மை சம்பவம் .., மின்வாரிய அதிகாரி விளக்கம்!!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு.., அம்பலமான உண்மை சம்பவம் .., மின்வாரிய அதிகாரி விளக்கம்!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் மூலம் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகை தாரர் பிரிவில் இணைப்புகளை மேற்கொண்டதாக மின்வாரிய அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

மின் இணைப்பு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.67 கோடி மின் நுகர்வோர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கான வசதியாக 2,811 மின்வாரிய அலுவலகங்களில் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம் மின்வாரியத்துறை ஏற்படுத்தி இருந்தது. இதன்மூலம் பெரும்பாலானவர்கள் ஆதார் இணைக்காததால் ஆன்லைனில் இணைப்பு பணிகளை மேற்கொள்ள கால அவகாசமாக பிப்ரவரி 28ம் தேதி வரை வழங்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து 99% மின் நுகர்வோர்கள் ஆதாரை இணைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிட்டனர். இந்நிலையில் சுமார் 91 லட்ச வீட்டு உரிமையாளர்கள் தங்களது மின் இணைப்பை வாடகைதாரர் பிரிவில் இணைத்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,”மாநிலம் முழுவதும் சுமார் 95 லட்சம் பேர் வாடகைதாரர் பிரிவில் மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கும் வெயிலுக்கு ஓய்வு., இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை? வானிலை மையம் தகவல்!!!

தற்போது ஆதார் இணைப்பு பணி மூலம் 91 லட்ச பேர் வீட்டு உரிமையாளர்கள் என தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சொத்து பிரச்சனை ஏதேனும் ஏற்படும் என்பதற்காக வாடகைதாரர் பிரிவில் மின் இணைப்பு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். எனவே இதுகுறித்த முழு தகவலை பெறுவதற்காக வீடுகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here