சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெற்றி பாதைக்கு திரும்ப தயாராக இருக்கும் பி வி சிந்து, எச்.எஸ். பிரணாய் இந்திய வீரர்கள்!!

0
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெற்றி பாதைக்கு திரும்ப தயாராக இருக்கும் பி வி சிந்து, எச்.எஸ். பிரணாய் இந்திய வீரர்கள்!!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெற்றி பாதைக்கு திரும்ப தயாராக இருக்கும் பி வி சிந்து, எச்.எஸ். பிரணாய் இந்திய வீரர்கள்!!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் களமிறங்க உள்ள இந்திய வீரர்களுக்கான முழு விவரத்தை குறித்து இப்பதிவில் காணலாம்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்:

பர்மிங்காமில் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் சமீபத்தில், நடைபெற்றது. இந்த மேட்ச்சை தொடர்ந்து, பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பாக சுவிட்சர்லாந்தின் பாசலில் உள்ள செயின்ட் ஜாகோப்ஷேலில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரானது நாளை (21.3) முதல் தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வெல்ல தவறிய இந்திய வீரர்கள், சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் தொடர் மூலம் வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள இந்த ஓபன் தொடரில், இந்தியா சார்பாக, ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து, எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடன் சமீர் வர்மா, மீராபா லுவாங் மைஸ்னம் ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

சூர்யகுமாரின் டக் அவுட்டால் முதன்மை தேர்வாக மாற இருக்கும் சஞ்சு சாம்சன்”…, வாசிம் ஜாஃபர் ஓபன் டாக்!!

மேலும், இந்த தொடருக்கான இரட்டையர் பிரிவில், A S சுனில் – N ரெட்டி, A ராய் – H M ஹரிநாராயணன், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், எம் ஆர் அர்ஜுன்-துருவ் கபிலா, ஷிகா கௌதம்-அஷ்வினி பட் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவில், N ரெட்டி- R கபூர் பங்கு பெற இருக்கின்றனர். நாளை முதல் தொடங்க உள்ள இந்த போட்டியில், இந்திய வீரர்கள் வெற்றியுடன் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here