IPL: டெத் ஓவரில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட CSK வின் தல தோனி…, வெளியான டாப் 10 லிஸ்ட் இதோ!!

0

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கடந்த 15 சீசன்களில் இந்திய 20 வது ஓவரில் அதிக சிக்சர் அடித்த வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

IPL:

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரானது இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் A பிரிவிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

முதன் முதலாக, இவ்வாறு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஐபிஎல் குறித்து ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15 சீசன்களில் 20 வது ஓவரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், CSK அணியின் தலா தோனி 52 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, MIயின் கெய்ரோன் பொல்லார்ட் 33, CSK யின் ஜடேஜா 26, GTயின் ஹர்திக் பாண்டியா 25 மற்றும் MIயின் ரோஹித் சர்மா 23 சிக்சர்களுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். மேலும், RCB அணியின் ஏபி டி வில்லியர்ஸ் 19, GTயின் டேவிட் மில்லர் 17 RCBயின் தினேஷ் கார்த்திக் 16, CSKயின் பிராவோ 15 மற்றும் ஹர்பஜன் சிங் 15 சிக்சர்களுடன் அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here